
அதி நவீன வான் வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி. டவர்) அமைக்கும் பணிகள் கடந்த 2021ல் தொடங்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் அமையும் இந்த வான் வழிக்கட்டுப்பாட்டு மையத்திற்கு, ₹88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இதன் மூலம் விமான நிலையத்தில் விமானங்கள் சரியான நேரத்தில் தரையிறங்குவது, புறப்படுவதை எளிதாகவும், துல்லியமாகவும் கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது.
வான் வழிகட்டுபாட்டு கோபுரம் சுமார் 44.9 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடம் 7 மாடிகளை கொண்டது. இதில் 4 மாடிகள் கட்டடமாகவும், 3 மாடிகள் கோபுரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கண்காணிப்பு கோபுரத்தின் (ATC) பணிகள் முடிவுற்றதால், இன்னும் ஓரிரு மாதங்களில் இம்மையம் செயல்படத் தொடங்கும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

