ஈரான் அரசு, ஹிஜாப் அணியாமல் நடமாடும் பெண்களுக்கு “மனநல சிகிச்சை” அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதிகாரிகள், இதனால் மதக்கட்டுப்பாடுகள் மற்றும் சமூக ஒழுக்கம் மேம்படும் என கூறுகின்றனர். இத்திட்டம் சர்வதேசத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பெண்கள் உரிமை போராட்டங்கள் தொடர்ந்து வலுத்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் பெண்கள் மற்றும் குடும்பத் துறையின் தலைவர் மெஹ்ரி தலேபி தரேஸ்தானி, மருத்துவ மையங்களுக்கான திட்டங்களை அறிவித்து, அவை “ஹிஜாப் நீக்கத்திற்கான அறிவியல் மற்றும் உளவியல் சிகிச்சையை” வழங்குவதாக தெரிவித்துள்ளார்.