
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மீட்சி மையம் கலங்கரையை தமிழக முதல்வர் காணொளியில் துவங்கியதை அடுத்து மறுவாழ்வு மீட்சி மையத்தை அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் திறந்து வைத்தார்
போதையிலிருந்து முழுவதுமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நோக்கில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பேச்சு
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலங்கரை என்ற பெயரில் போதை தடுப்பு மருத்துவம் மறுவாழ்வு மீட்சி மையத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் துவங்கியதை அடுத்து அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மேயர் சுஜாதா, அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரோஷினி உள்ளிட்டோரும் திரளான மருத்துவர்களும் மாணவ மாணவிகளும் இவ்விழாவில் பங்கேற்றனர் இந்த மறுவாழ்வு மீட்சி மையத்தி போதையால் பாதிக்கபடும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி பிரிவுகளாக சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பேசுகையில்
போதையிலிருந்து அடிமையானவர்கள் மீட்பதற்காக கலங்கரை எப்படி கப்பல்களுக்கு வெளிச்சம் தருகிறதோ அதை போல் இந்த திட்டம் மூலம் மருத்துவர்களாகிய நீங்கள் போதையால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டுமென பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கணியம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன் வேலூர் ஒன்றிய செயலாளர் சி.எல்.ஞானசேகரன் பேரூராட்சி செயலாளர் பி.அருள்நாதன் பேரூராட்சி சேர்மன் பவானி சசிகுமார் டாக்டர்கள் செவிலியர்கள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் வி.விஜயகுமார்