
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம் மாநிலம் முழுவதும் 8 லட்சத்தி 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
வேலூர் மாவட்டத்தில்
80 மையங்களில் 15,985 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்
பன்னிரண்டாம் வகுப்புக்கு தமிழ் பாடத்தேர்வுடன் பொதுத்தேர்வு 3 தேதி இன்று தொடங்குகிறது.
தொடர்ந்து, வரும் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
இதில் வேலுார் மாவட்டத்தில் மொத்தம் 80 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 141 பள்ளிகளில் இருந்து 7 ஆயிரத்து 628 மாணவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம்
15 ஆயிரத்து 985 +2 வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
மேலும் பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடத்துக்கான வினாத்தாள்கள்
வேலுார், காட்பாடி, குடியாத்தம் பகுதியில் உள்ள 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு
அதோடு இந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு 19 வழித்தடங்கள் மூலமாக தேர்வு நடைபெறும் மையத்திற்கு சம்பந்தப்பட்ட பாடத்துக்கான வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடு வருகின்றனர்.
மேலும் பொதுத்தேர்வை எழுதும் மாணவ,மாணவிகள் தேர்வு அறைக்கு தங்களுடன் எலக்ட்ரானி பொருட்கள், செல்போன் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒழுங்கின செயல்களில் ஈடுபடும் மாணவ,மாணவிகள் மீது குற்றம் நடவடிக்கை எடுப்பதுடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாத வகையில் தண்டனை வழங்கப்படும்
என தேர்வு துறையும் எச்சரித்துள்ளது.
தேர்வு நடைபெறும் அறைகளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன
தேர்வுக்கு மாணவ,மாணவிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் பேருந்து போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேர்வு மையங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் எல்லாம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று.
தேர்வு மையங்களின் தேர்வு அறைகளில் மாணவர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்தது.
மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அனைத்து மையங்களிலும் தயார் நிலையில் உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் 10 மணிக்கு தேர்வு அறைக்கு வந்ததும் விடைத்தாள் வழங்கப்படும்
அதன் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விவரங்களை எழுதும் வகையில் ஐந்து நிமிடம் நேரம் வழங்கப்படும்.
பின்னர் கேள்வித்தாள் வழங்கப்படும் கேள்வி
தாளை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடங்கள் வழங்கப்படும்.
பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் புகார்கள் தெரிவிக்க கல்வித்துறை சார்பில் 14417 இலவச உதவி மையம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
மேலும் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்த ஆசிரியர்கள்.

