
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் உட்பட பணியாளர்கள் தண்ணீர் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்படுவதாக வேதனை.
செயல்படாத ஆழ்துளை கிணறு உயிர் பலி வாங்கும் பள்ளமாக மாறி இருக்கிறது இதை சரி செய்து தர பலமுறை கோரிக்கை வைத்தும் சரி செய்து தர முன்வராத மாநகராட்சி நிர்வாகம்
வேலூர் மாவட்டம்,
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்து மண்டபம் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நகர்புற நலவாழ்வு மையம் சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 25 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை முத்து மண்டபம், டோபிகானா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தொடர்ந்து மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வதாகவும்.
இந்த சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதி கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லை எனவும்
மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் பெண் செவிலியர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்கள் தண்ணீர் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக தண்ணீர் வசதி இல்லாததால் மருத்துவமனையில் உள்ள கழிப்பறையும் பயன்படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசிய தேவை
ஆனால் தண்ணீர் இல்லாததால் இரத்தப் பரிசோதனை நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது இதுபோன்ற சிகிச்சைகளை அளிக்க முடிவதில்லை
இது போன்ற மருத்துவ வசதிகள் தேவைப்படும் நோயாளிகளை மற்ற மருத்துவமனைகளுக்கு சென்று விடுங்கள் என்று சொல்லி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவதால் பணியாளர்களும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மருத்துவமனை கட்டித் தரும் போது ஆழ்துளை கிணறு ஒன்று அமைத்து தரப்பட்டது அந்த ஆழ்துளை கிணறு தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை எனவும் அந்த ஆழ்துளை கிணற்றில் வைக்கப்பட்ட மோட்டார் என்ன ஆனது என்றும் தங்களுக்கு தெரியவில்லை
தற்போது வரை அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பகட்டியில் தண்ணீரை கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியில் சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருக்கின்றது
இந்த பகுதிக்கு யாராவது சென்றால் பள்ளத்தில் விழுந்து உயிர் பலி ஏற்படும் நிலை இருப்பதாகவும்
இது குறித்து தாங்கள் பகுதியில் மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும்
தற்போது வரை தண்ணீர் வசதி செய்து தரவில்லை தண்ணீர் இல்லாமல் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் உட்பட பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பாலாற்றின் கரையோரம் அமைந்திருப்பதின் காரணமாக புதர்களின் நடுவே இந்த மருத்துவ வளாகம் அமைந்திருக்கின்றது.
ஆகவே இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மற்றும்
மது பிரியர்கள் இந்த பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு மது பாட்டில்களை இந்த பகுதியிலே போட்டுவிட்டு செல்வதாகவும்
உரிய பாதுகாப்பு எதுவும் இல்லாமல் இருப்பதால் இந்த மருத்துவமனை சுற்றி காம்பவுண்ட் சுவர்களை எழுப்பி இரவு காவலரை பணியமற்ற வேண்டுமென இந்த மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.