
வேலூர் மாவட்டம் காட்பாடி திருவள்ளுவர் நகரில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவில் மறைந்த முன்னோர்களின் கல்லரையில் படையல் இட்டு வழிபாடு நடத்தினர். மயானக்கொளையின் முக்கிய நிகழ்வாக திருவள்ளுவர் நகரில் இருந்து அங்காளம்மன், உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு பூ பல்லக்கில் மயனத்திற்க்கு ஊர்வலமாக வந்தன.
பல்வேறு வேடங்களை அனிந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இடுக்காட்டில் சூறையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சூறையாடலின்போது உப்பு, சுண்டல், பொரி, எலுமிச்சை, கடலை உள்ளிட்டவற்றை பக்கதர்கள் வீசினர்.
இதில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதற்கு பிரம்மபுரம் காவல் துறையினர் பாதுக்காப்பு பணியில் இருந்தனர்.
இந்த மயனகொள்ளை திருவிழா ஆண்டுதோறும் எங்கள் கிராமத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

