வி.விஜயகுமார் மாவட்ட செய்தியாளர் வேலூர் மாவட்டம்.

வேலூர் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயிலில் சடலமாக கிடந்த இளைஞர்
இளைஞர் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்து இருப்பாரா? கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவு வாயிலின் கேட் அருகாமையில் இளைஞர் தலைக்குப்புற விழுந்த நிலையில் சடலமாக இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சடலமாக கண்டெடுத்த நபர் ஊசூர் அடுத்த வீர ரெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா 36 இவர் சப்ளையர் வேலை செய்து வருவதாகவும்
இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதாகவும் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகவும்
இவர் தொடர்ந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்து வருபவர் எனவும் தெரியவந்துள்ளது இவர் நேற்று இரவு ஊசூர் பேருந்து நிலையம் கடந்த செல்லும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இந்த இளைஞர் மது போதையில் தவறி விழுந்து உயிர் இழந்திருப்பாரா? இல்லை யாரேனும் இவரை கொலை செய்திருப்பார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

