செய்தி முன்னோட்டம்
ரின்கு சிங் உத்தரபிரதேச அணிக்கு வரவிருக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது மாநில அளவில் அவரது முதல் தலைமைத்துவத்தை குறிக்கும். டிசம்பர் 21ஆம் தேதி விஜயநகரில் நடக்கும் குரூப் டி மோதலில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிராக உத்தரப் பிரதேசம் தனது ஆட்டத்தைத் தொடங்குகிறது.
இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் அணியை வழிநடத்திய புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக ரின்கு சிங் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த உபி டி20 லீக்கில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு, அணிக்கு பட்டத்தை வென்று கொடுத்ததோடு, 161.54 ஸ்டிரைக் ரேட்டில் 210 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2025இல் தக்கவைத்துக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ரின்கு சிங்கை தக்கவைத்துக் கொண்டது.
இதனால். அவர் கேகேஆர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்ற ஊகங்கள் இருந்து வரும் நிலையில், அவர் விஜய் ஹசாரே போன்ற உள்நாட்டு தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
“2015-16ல் எங்கள் வெற்றிக்குப் பிறகு அணியை மற்றொரு பட்டத்திற்கு அழைத்துச் செல்வதை இலக்காகக் கொண்டதால், உத்தரப் பிரதேசத்திற்கான எனது திட்டங்களில் நான் கவனம் செலுத்துகிறேன்” என்று ரின்கு சிங் கூறினார். ஒரு சிறந்த லிஸ்ட்-ஏ செயல்திறன் கொண்ட அவர், 52 இன்னிங்ஸ்களில் 48.69 சராசரியில் ஒரு சதம் மற்றும் 17 அரைசதங்கள் உட்பட 1,899 ரன்கள் குவித்துள்ளார்.