தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அறிவித்திருந்தாலும், அதற்கான ரிவியூ மீட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் இன்று வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
SPG, Z+, Z, Y+, Y, X ஆகிய பிரிவு பாதுகாப்பு அறிவித்த பின்பு, மத்திய அரசின் Security Review Committee (SRC) ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
எந்தெந்த மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதோ? அந்தந்த மாநில டிஜிபி, உளவுத்துறை அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்