வாழ்வாதாரம் இழந்து உள்ளோம் என 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

வாழ்வாதாரம் இழந்து உள்ளோம் என 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

பணி நியமனம் வழங்கக் கோரி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து மாநிலத் தலைவா் ம. இளங்கோவன் கூறியதாவது:- ஆசிரியா் தகுதித்
தோ்வில் தோ்ச்சி பெற்றும் 12 ஆண்டுகளாக பணி வழங்கப்படாமல் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து முறைசார பணியாளா்களாக அல்லல்படுகிறோம்.

பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவொரு தீா்வும் எட்டப்படவில்லை. ஆசிரியா் தகுதித் தோ்வில், தோ்ச்சி பெற்றவா்கள் பணி பெற வேண்டுமானால் மீண்டும் ஒரு நியமனத் தோ்வு எழுதப்பட வேண்டும் என்ற அா்த்தமற்ற நிலை, நாட்டிலேயே தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. திமுக எதிா் கட்சியாக இருந்தபோது நியமனத் தோ்வு தொடா்பான அரசாணையை கண்டித்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த அதிமுக ஆட்சி பின்பற்றிய நடைமுறையை தொடா்வதை ஏற்க முடியாது. மேலும், திமுக-வின் தோ்தல் வாக்குறுதிப்படி ஆசிரியா் நியமனம் நடைபெற வேண்டும். குறைந்தபட்சம் தொகுப்பூதிய அடிப்படையிலாவது பணி நியமனம் செய்ய வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் பிரபாகரன், மாநில செயலாளர் சண்முகப்பிரியா, மாநில பொருளாளர் ஹரிஹரசுதன், மாநில அமைப்பாளர் ஸ்ரீதர்,மாநில பொறுப்பாளர் ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *