வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ்

வாணியம்பாடி முத்தமிழ் மன்ற 32 ஆம் ஆண்டு விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றம் செய்த குழுவினை தமிழறிஞர்கள் பாராட்டினர்

வாணியம்பாடி: பிப்:27, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தலை சிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நாடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு விழாவானது மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் தலைவர் சண்முகம், செயலாளர் பிரகாசம், நெறியாளர் விசாகப்பெருமாள், இணை செயலாளர்கள் நாகேந்திரகுமார்,பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா நெறியாளுகையின் கீழ் , முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் நாடகம் அரங்கேற்றம் செய்தனர்.

இந்த நாடக விழாவானது வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். தொழிலதிபர் பட்டேல் முகமது யூசூப் வாழ்த்துரை வழங்கினார்.
திருப்பத்தூர் மாற்று நாடக இயக்கத்தின் ” முத்தமிழ் கலைஞரின் சிலப்பதிகாரம்” என்னும் நாடகம் சிறப்பாக நிகழ்த்தினர்.

இந்த நாடகத்தில் கதாபாத்திரங்களாக கோவலன்- பேரா முனைவர் கி.பார்த்திபராஜா, கண்ணகி – வழக்கறிஞர் சிநேகா, பாண்டிய மன்னர்- வேலாயுதம், கிரேக்கக் கிழவர்- முருகன், வசந்தமாலை, கவுந்தி- முனைவர் ஆ.ரூபா, தேவந்தி- மும்தாஜ் சூர்யா, மாதவி- சஞ்சு தர்ஷிணி, சித்ராபதி-பவித்ரா, பாண்டிமாதேவி- மாலதி,சோழ மன்னர்- தசரதன், மாசாத்துவான்-ஜீவா, மாநாயகன், அதிகாரி- ஞான முருகன், அமைச்சர் -செல்வராஜ், மாதரி- நித்யா, ஐயை-கீதப்பிரியா, பொதுமக்கள் -மௌனிகா,பொற்கொல்லர்- கண்ணன், தூதுவன்-ஆதவன், காவலர்கள்- ராஜசேகர், எழில் அரசு, கோவிந்தராஜ், சந்தோஷ், வழிப்போக்கன் -மோகன், மக்கள் -நவீஷ், குணால், சீத்தலைச்சாத்தனார்- பேராசிரியர் பால.சுகுமார், பின்னரங்கமாக, கீ போர்டு- வின்செண்ட் மாஸ்டர், தவில் சாரல் ரஜினி, பறை இசை தமிழ்நாடு அரசு விருதாளர் கலைவளர்மணி முனைவர் பட்ட ஆய்வாளர் ரஜினி, துடும்பு விக்னேஷ், ஒளியமைப்பு – ராஜசேகர், ஒலியமைப்பு- சேகர், ஒப்பனை-அஸ்வினி, ஒப்பனை உதவியாளர்கள் – முனைவர் நிர்மலா, ஆதிலா ஐரின், ஆரிஃபா ஜெசி, உதவி -அகரன், குழு மேலாளர்- அரவிந்த் ஆகியோரின் குழுவினரால் சிறப்பாக நடத்தினர். மேலும் இந்த நாடகத்தில் கண்ணகியாக நடித்த வழக்கறிஞர் சிநேகாவின் மன்னரை வஞ்சினம் உரைத்தல், சிலம்பினைக் கொண்டு சூளுரைத்தல், கோவலனை எரித்தற்கு நீதி கேட்டல் , மற்றும் மதுரையை எரித்த காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிறப்பாக நடத்திய நாடகத்தினை தமிழறிஞர்கள் அனைவரும் பாராட்டி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் செல்வராஜ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிர்வாக இயக்குநர் ரமேஷ், வாணியம்பாடி ஓட்டல் சரவணபவன் குமரகுரு, ஓட்டல் சாய் சுப்ரபாதம் மேத்தாகிரி ஆகியோர் நிகழ்ச்சி கொடை வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *