வாணியம்பாடியில் நரபலி கொடுக்க துன்புறுத்திய மாந்திரீகவாதி மீது பெண் புகார்!

வாணியம்பாடியில் நரபலி கொடுக்க துன்புறுத்திய மாந்திரீகவாதி மீது பெண் புகார்!

வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதுமனை கிரிசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் பராசக்தி வயது 32 இவருடைய கணவர் சுரேஷ் குறி மற்றும் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் புதையல் இருப்பதாகவும் புதையலை எடுக்க மகனை நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி பராசக்தி வற்புறுத்தி வந்துள்ளார்.

பராசக்திக்கு மகள் சுஜிதா வயது 12 திருமலை வயது 14 இரு பிள்ளைகள் தனது தாய் வீட்டில் படித்து வருகின்றனர். இன்று காலை 8 மணியளவில் அதே பகுதி சேர்ந்த மகாலட்சுமி கணவர் கார்த்திக் மற்றும் சுரேஷ் தாயார் மலர் ஆகிய மூவரும் சேர்ந்து பராசக்தியை கீழே தள்ளி அடித்து துன்புறுத்தி மகனை மட்டும் அழைத்து நரபலி கொடுக்க உதவுமாறு உடல் ரீதியாக துன்புறுத்தியதால் மன வேதனை அடைந்த பராசக்தி தனது தாயரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதிப்தி அடைந்த குடும்பத்தினர் பராசக்தி அழைத்துக் கொண்டு வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் கணவர் சுரேஷ் மற்றும் மாமியார் மலர் உறவினர் மகாலட்சுமி கார்த்திக் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்துள்ளார்‌.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *