ராம்- ஜானு ரசிகர்களே! 96 இரண்டாம் பாகம் உருவாகிறது!

ராம்- ஜானு ரசிகர்களே! 96 இரண்டாம் பாகம் உருவாகிறது!

பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’96 திரைப்படத்திற்கு ரசிகர்கள் இல்லாமல் இருக்க முடியாது.
அப்படத்திற்கு பின்னர் பிரேம்குமார் இயக்கிய மெய்யழகன் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக தற்போது ’96 படத்தின் சீக்குவல், அதாவது அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் பாகத்தில் யார் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும் இந்த படத்தின் திரைக்கதை பணிகள் முடிவடைந்தாகவும், டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளனர் எனவும் இணையத்தில் செய்திகள் கூறுகின்றன.
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக இணைவார் எனவும் கூறப்படுகிறது.
source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *