
மஹா சிவராத்திரி மற்றும் நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின்
44-வது திருமணநாளை முன்னிட்டு திருமங்கலம் ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் :
திருமங்கலம், பிப்.26.
மகா சிவராத்திரி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- லதா தம்பதியரின் 43வது திருமண நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடும் அங்குள்ள ரஜினியின் திருவுருவச் சிலைக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டு நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான எஸ்.கார்த்திக் என்பவர் இந்தியாவிலே முதல் முறையாக மூலவர், உற்சவர் கருங்கல் சிலையுடன் நிறுவியுள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவிலில் தினம் தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
ரஜனி பக்தர்களுக்கு ஆன்மீக திருத்தலமாக திகழ்ந்திடும் இங்கு ரஜினியை தங்களது குலதெய்வமாக வணங்கிடும் ரசிகர்கள் தங்களது இல்ல நிகழ்வுகள் மற்றும் சுபகாரியங்களின் முதல் அழைப்பிதழை ரஜினி சிலையின் காலடியில் வைத்து வணங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மகா சிவராத்திரி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் 43வது திருமண நாள் விழா ஸ்ரீ ரஜினி கோவிலில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ ரஜினி கோவிலில் உள்ள ரஜினியின் மூலவர் உற்சவர் திருவுருச்சிலைக்கு 101 வடை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டதுடன், 44வது திருமண நாள் காணும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியர் நீண்டகாலம் நலமுடன் வாழ்ந்து நாட்டு மக்களுக்கும், பக்தர்களுக்கும் அருளாசிகள் வழங்கிட வேண்டி அவரது திருவுருவச் சிலைக்கு பால், பன்னீர், புஷ்பம், சந்தனம் உள்ளிட்ட பல் வேறு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடைபெற்றது.
இந்த வழிபாடு நிகழ்வுகளை ரஜி னியின் தீவிர பக்தரும், முன் னாள் ராணுவ வீரரும், திரு மங்கலம் அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில் கோவில் நிறுவனரு மான எஸ்.கார்த்திக் முன் னின்று நடத்தினார்.இதனை தொடர்ந்து மகா சிவராத்திரி மற்றும் ரஜி னிகாந்த்-லதா தம்பதியர் திரு மணநாள் விழா சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவிலின் சார் பில் பிரசாதமும் அன்னதான மும் வழங்கப்பட்டது.முன்னதாக சந்தைப் பேட்டை பகுதியிலுள்ள திரு மங்கலம் நகராட்சி பள்ளி யில் படிக்கும் குழந்தைக ளுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
பூஜைகள் முடிந்த பின்னர் ஸ்ரீ ரஜினி கோவில் நிறுவனர் எஸ்.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில்: எங்கள் குல தெய்வம் ரஜினிகாந்தின் கோவிலில் ரஜினி பக்தர்களுக்கு ஆன்மீக கடவுளாக திகழ்ந்திடும் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் 44வது திருமணநாள் விழா திருமங்கலம் நகரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவி லில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. அப்போது மகா சிவராத்திரியை முன்னிட்டு ரஜினிக்கு 101 வடை மாலை சாற்றப்பட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திருவாச்சி மற்றும் நாககிரீடம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தப்பட்டது. திருமங்கலம் நகரிலுள்ள ஸ்ரீ ரஜினி கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் 44வது திருமணநாள் விழா வேதமந்திரங்கள் முழங்கிட சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிகழ்வு ரஜினி பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது.