தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (நவம்பர் 25), இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பற்றுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குள் தமிழக-இலங்கை கடற்கரையை நெருங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆர்எம்சி இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
source

