மும்பையில் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அந்த அணியின் தலைவர் அஜித் பவார் ஆலோசனை மேற்கொண்டார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி, மொத்தமுள்ள 288-இல் 231 தொகுதிகளில் வென்றது. இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, 41 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது.
இந்நிலையில், ஆட்சியில் பங்கெடுப்பது தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் அஜித் பவார் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.