
க.பாலகுரு
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்.
முத்துப்பேட்டை தர்கா ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டார்.
முத்துப்பேட்டை மார்ச்,10-
சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சியை கொண்டு வருவோம் என இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம் என முத்துப்பேட்டை தர்கா ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா பேச்சு…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உலக புகழ் பெற்ற ஜாம்புவான்ஒடை தர்காவில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பங்கேற்றார்.தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது
தொடர்ச்சியாக சசிகலா பேசியபோது…
புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேடையில் அமர்ந்திருக்கும் இஸ்லாமிய சொந்தங்கள், கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.முத்துப்பேட்டையில் பிரசித்தி பெற்ற ஷேக் தாவூத் தர்காவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது.
நோம்புக்கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாசலுக்கு அரிசியை அம்மா அவர்கள் வழங்கினார்.
உலமாக்களின் மாதாந்திர ஊதியத்தை 750லிருந்து 1000ரூபாயாக உயர்த்தி வழங்கினார் அம்மா அவர்கள்.
வக்பு வாரிய ஓய்வூதிய, பணி கொடை வழங்கும் மானியத்தை 3கோடியை அம்மா அவர்கள் வழங்கினார்.
தர்ஹா, பள்ளிவாசல் மறு சீரமைப்பு,உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அம்மா அவர்கள் 3கோடி வழங்கினார்.நபிகள் எல்லோரையும் நல்வழிப்படுத்த அறிவுரைகள் வழங்கினார்.ரமலான் மாதத்தில், தொழுகை நோம்பு, இறை நம்பிக்கை, நேர்மை,உள்ளிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்
இஸ்லாமிய சகோதரிகளை ஆதரித்து அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக நின்று போராடுவோம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சியை கொண்டு வருவோம் என இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம் என தெரிவித்தார்