
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளினை முன்னிட்டு பெரியகுளத்தில் நகர் திமுகவினர் அசைவ உணவு வழங்கி கொண்டாட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இசிஆர்சி எனப்படும் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் 100 க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளினை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் அசைவ உணவு வழங்கி கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர அவைத்தலைவர் வெங்கடாசலம் , நகர துணைச் செயலாளர்கள் எம். சேதுராமன், வாசுகி, சரவணன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் , ராஜபாண்டி, நகர பொருளாளர் சுந்தரபாண்டி , தேனி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக், நகர் மன்ற உறுப்பினர்கள் ரூபினி ஜான், பிரியங்கா ராஜ்குமார், முகமது அசினா, சுதா நாகலிங்கம், பாண்டியராஜன், வைகை சரவணராஜா,வழக்கறிஞர் சக்தி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர் .

