
திருப்பத்தூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
மேலும் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா என்பவர் இன்று மனு அளித்தார் அதில் குறிப்பிட்டு இருந்தது 2023 ஆம் ஆண்டு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது
மேலும் எனக்கு வழங்கப்பட்ட இலவச பட்டா சோலூர் பகுதியில் இருப்பதால் எனக்கு வீடு கட்டுவதற்கு பண வசதியோ பொருள் வசதியோ இல்லை
ஆகையால் எனக்கு இலவச வீடு கட்டுவதற்கு அல்லது வங்கிக் கடனும் பெற்று தரவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தது
பின்பு கூட்டத்தில் மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் சிவசவந்தரவல்லி உடனடியாக தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என ஆணையிட்டார் இதனால் மாற்றுத்திறனாளிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது