
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜியின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்நில்குமரன் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி பேரணாம்பட்டு ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஒன்றிய துனை தலைவர் லலிதா டேவிட் பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் பேரணாம்பட்டு நகர்மன்றத் துனை தலைவரும் திமுக நகர செயலாளருமான ஆலியார் ஜுபேர் அஹ்மத், பேரணாம்பட்டு வேளாண்மை ஆத்மா குழு தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான பொகளூர் ஜனார்த்தனன், மேற்கு ஒன்றிய செயலாளர் டேவிட் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கிருஷ்ன வேணி ஜெலந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேரணாம்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்த கொண்டு அங்கு 19 வகையான பல்வேறு துறைகள் அமைக்கப்பட்டு. மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுள்ளனர். இதில் மூன்று மாற்றுத் திறனாளிகளுக்கு 305400 மதிப்பீட்டில் இனைப்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ள புதிய பெட்ரோல் இரு சக்கர வாகனங்களையும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு 15750 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியை வருவாய் மாவட்ட அலுவலர் மாலதி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜய், பேரணாம்பட்டு ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனன், ஒன்றிய துணைத் தலைவர் லலிதா டேவிட் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மாற்று திறனாளி பெண் ஒருவர் மாற்றுதிறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாமையும் அதனால் பயனடைந்ததை குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்தனர்.
இம்முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளரி, வினோத் குமார், வட்டாட்சியர் சிவசங்கரன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கிதா பிரியா, லட்சுமி துறை, ஸ்ரீதேவி சோக்கன், சந்திரேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

