
திருப்பத்தூர் : ஆகஸ்ட் – 21
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மற்றப்பள்ளி ஊராட்சியில்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 20/08/2025 அன்று காலை 10 மணியளவில் விஷமங்கலம் வெற்றி மஹால் மண்டபத்தில் மற்றப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பூபதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவசௌந்தரவல்லி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட பயனளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்கள். மேலும் மாற்றுத்திறனாளி மாணவன் சுனில் குமார் 16 வயது தகப்பனார் பெயர் வேலு மற்ற பள்ளி சார்ந்த மாணவனுக்கு முகாமில் 40 ஆயிரம் மதிப்புள்ள ஊனமுற்றோர் எலக்ட்ரிக் வாகனம் உடனடியாக வழங்கப்பட்டது.
உடன் கந்திலி ஒன்றிய குழு செயலாளர்கள் முருகேசன், குணசேகரன், மோகன்ராஜ் கந்திலி ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி திருமுருகன், துணைச் சேர்மன் மோகன்ராஜ், முன்னாள் சேர்மன் அரசு, வட்டாட்சியர் நவநீதம், துணைத் தலைவர் திருப்பதி, கிளைச் செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் சதீஷ், மாற்றுத்திறனாளி முட நீக்கு வல்லுநர் இனியன், கவியரசு, மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

