
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவில் கடைவீதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நிகழ்காலத்தை எடுத்துரைத்து அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களை இந்த விடியா அரசு முடக்கிவிட்டது தாய்மார்களின் கஷ்டங்களை உணர்ந்து, வாழ்வாதாரத்தை உயர்த்த பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டத்தை அம்மா கொண்டு வந்தவர் புரட்சி தலைவி அம்மா 7 ஆயிரம் கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறைவேற்றியவர் அம்மா. மக்கள் வரிப்பணத்தை.மக்களுக்காகவும்,மகளிர்க்காக திருப்பி கொடுத்தவர் அம்மா. அம்மா இருச்சக்கர வாகனம், அம்மா சிமெண்ட்,அம்மா குடிநீர், அனைத்தும் ரத்து மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் அம்மா ஏழை எளிய, விவாசாய குடும்ப மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து அம்மா வழியில் எடப்பாடி அரசால் கொடுக்க முடிந்த போது ஏன் திமுக அரசால் மட்டும் கொடுக்க முடியவில்லை என விமர்சித்து பேசினார்.
ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நிகழ்ச்சியில். திமுக இருந்து விலகி 50 மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்து கொண்டனர் அவர்களுக்கு சால்வை போற்றி மாவட்ட கழக செயலாளர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய கழக பேரூர் கழக நகரகழக செயலாளர் உள்ளிட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்ன.

