
மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட மகாதான தெருவில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 45 இலட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
மயிலாடுதுறை நகராட்சி தற்பொழுது நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது, இதில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இதன் மக்கள் தொகை 85599 ஆகும். (2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) தற்போதைய மக்கள் தொகை 90986 ஆகும். இந்நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.27 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
தற்பொழுது மயிலாடுதுறை நகராட்சி, மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரில் அமையப்பெற்றுள்ளதால் இந்நகராட்சியின் பிரதான சாலைகளை உடனடியாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொண்டு சாலைகளை சீரமைக்க பணிகள் மேற்கொள்ள ரூ.3 கோடியே 45 இலட்சம் மதிப்பீட்டில் திட்ட கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசுக்கு சமர்பிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மகாதான தெருவில் 780.00 மீ நீளமும், 6.00 மீ அகலமும், பெரியக்கடை தெருவில் 150.00 மீ நீளமும், 4.30 மீ அகலமும், பட்டமங்கல தெருவில் 645.00 மீ நீளமும், 6.30 மீ அகலமும், நாராயணன்பிள்ளை சந்தில் 150.00 மீ நீளமும், 4.50 மீ அகலமும் என மொத்தம் 1725 மீட்டர் அளவில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை இன்றைய தினம், ஆய்வு செய்து, சாலையினை தரமானதாகவும், ஒப்பந்தகால கெடுவிற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆழ்வார் குளம் மேம்பாட்டு பணிகள் ரூ.48 இலட்சம் மதிப்பிலும், செல்வவிநாயகர் நகர் பூங்கா மேம்பாடு செய்யும் பணி ரூ.42 இலட்சம் மதிப்பிலும், கே.கே.நகர் பூங்கா மேம்பாடு செய்யும் பணி ரூ.16 இலட்சம் மதிப்பிலும், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியில் கூடுதல் பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.3 கோடியே 31 இலட்சம் மதிப்பிலும், கடன் உத்தரவாத நிதி திட்டத்தின் கீழ் பழுதடைந்த பாதாள சாக்கடை பிரதான குழாய்களை கழிவுநீர் ஏற்று நிலையம் மாற்றி அமைக்கும் பணி ரூ.3 கோடியே 78 இலட்சம் மதிப்பிலும், ஜெர்மன் வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரிப்பு செய்யும் பணி ரூ.52 கோடியே 93 இலட்சம் மதிப்பிலும். ஜெர்மன் வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆறுபாதி கழிவுநீர சுத்திகரிப்பு நிலையத்தில் மற்றும் சித்தர்காடு பகுதியில் கழிவுநீர சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, இயக்க மற்றும் பராமரிப்பு செய்யும் பணி ரூ.19 கோடியே 25 இலட்சம் மதிப்பிலும், சட்டமன்ற உறுப்பினர்
நிதியின் கீழ் வார்டு எண் 18-இல் ஈமகிரி கூடுதல் மண்டபம் மற்றும், ஃபேவர் பிளாக் ரூ.14 இலட்சம் மதிப்பிலும், வார்டு எண் 22-ல் செட்டிகுளம் சந்து குருஞானசம்பந்தர் நகர் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கும் பணி ரூ.15 இலட்சம் மதிப்பிலும், வார்டு எண் 16-ல் விஜயா திரையரங்கம் எதிரில் புதிய அங்காடி கட்டிடம் அமைக்கும் பணி ரூ.16 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், வார்டு எண் 9-ல் காக்கும் பிள்ளையார் கோயில் அருகில் மினிபவர் டேங்க் அமைக்கும் பணி ரூ. 4 இலட்சம் மதிப்பிலும், வார்டு எண் 31-ல் அறுபத்து மூவர் பேட்டை வடக்கு தெருவில் மினிபவர் டேங்க் அமைக்கும் பணி ரூ.4 இலட்சம் மதிப்பிலும், வார்டு எண் 11-ல் மினிபவர் டேங்க் அமைக்கும் பணி ரூ.4 இலட்சம் மதிப்பிலும், வார்டு எண் 3-ல் கவர குள மேட்டில் மினிபவர் டேங்க் அமைக்கும் பணி ரூ.4 இலட்சம் மதிப்பிலும், வார்டு எண் 30-ல் ஆரோக்கியநாதபுரம் மினிபவர் டேங்க் அமைக்கும் பணி ரூ.4 இலட்சம் மதிப்பிலும், வார்டு எண் 4-ல் குப்பங்குளம் மேல்கரை மினிபவர் டேங்க் அமைக்கும் பணி ரூ.4 இலட்சம் மதிப்பிலும், வார்டு எண் 24-ல் சின்ன கண்ணாரத்தெருவில் மினிபவர் டேங்க் அமைக்கும் பணி ரூ. 4 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.161 கோடியே 3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது, ஆர்டிஓ விஷ்ணுபிரியா, நகரமன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

