
புதுதில்லியில் உள்ள விக்கியான்பவனில் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் தின விழா இன்று (பிப்ரவரி 28 -ஆம் தேதி) நடைபெற்றது. இதில், இந்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர். ஜிதேந்திரசிங், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு கிருஷ்ணன் அவர்களுக்கு ’பர்ஸ்’ எனப்படும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியலை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க விருதினை வழங்கினார்.
“Promotion of University Research and Scientific Excellence” (PURSE) ’பர்ஸ்’ விருதானது பல்கலைக்கழகங்களில் ஆய்வு மற்றும் அறிவியல் துறையில் சிறப்பான பங்காற்றக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என குறிப்பிடத்தக்கது.