மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே

மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே
மாதிரி புகைப்படம்

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வே அதிவேக ரயில் வளர்ச்சியில் தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூறினார்.

சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) BEML உடன் இணைந்து வடிவமைக்கப்படும் இந்த ரயில், 280 kmph வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வ பதிலின் போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த முயற்சியானது “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைப் பின்தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட ரயில்களை உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துகிறது.

விவரங்கள்

₹28 கோடி பொருட்செலவில் ரயில் வடிவமைப்பு 

வைஷ்னாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு ரயில் பெட்டியும் தயாரிக்க தோராயமாக ₹28 கோடி செலவாகும்.

“உலகளவில் உள்ள மற்ற அதிவேக ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடும்போது உற்பத்தி செலவு கணிசமாகக் குறைவு” என்று அமைச்சர் கூறினார். “அதிவேக ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஒரு சிக்கலான மற்றும் தொழில்நுட்ப-தீவிர செயல்முறையாகும்” என்றும் வைஷ்ணவ் கூறினார்.

தொழில்நுட்ப அம்சங்களை எடுத்துரைத்த அமைச்சர், திட்டத்தின் சவால்களை விவரித்தார்.

“ஏரோடைனமிக் மற்றும் காற்று புகாத கார் உடல் வடிவமைப்பு, அதிவேக பயன்பாடுகளுக்கான மேம்பட்ட உந்துவிசை அமைப்புகள் மற்றும் எடை மேம்படுத்தல் ஆகியவை இதில் அடங்கும்” என்று அவர் விளக்கினார்.

அம்சங்கள்

புதிய அதிவேக ரயிலின் முக்கிய அம்சங்கள்

ரயில் பெட்டிகள் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் எனவும் அவர் கூறினார். இந்த புதிய அதிவேக ரயிலில் கீழ்கண்ட அம்சங்கள் முக்கியமாக இடம்பெறும்: –

ஏரோடைனமிக் வெளிப்புறம்

சீல் செய்யப்பட்ட கேங்க்வேகள் மற்றும் தானியங்கி கதவுகள்

காலநிலை கட்டுப்பாட்டுக்கான அதிநவீன HVAC அமைப்புகள்

சிசிடிவி கண்காணிப்பு, மொபைல் சார்ஜிங் போர்ட்கள் மற்றும் தீ பாதுகாப்பு உபகரணங்கள்.

“இந்த ரயில் பெட்டிகள் உகந்த பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிறந்த-இன்-கிளாஸ் அம்சங்களைக் கொண்டிருக்கும்” என்று வைஷ்ணவ் மேலும் கூறினார்.

விரிவான வடிவமைப்பு தயாரானதும், திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு இறுதி செய்யப்படும்.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *