
பேராவூரணி, பிப்.28 –
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மதன்பட்டவூர், சிவனாம்புஞ்சை கிராமத்தில் தாய்மண் பாலம் அறக்கட்டளை, கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், கிராம விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், பாண்டிச்சேரி காவல்துறை ஐ.ஜி.சத்தியசுந்தரம் ஆகிய மூவரும் இணைந்து கொடியேற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதில் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சுழற் கோப்பை, சான்றிதழ்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.
நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.மகேந்திரன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகளை காண சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.