
பேரணாம்பட்டு பெரியதாமால் செருவு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15 வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செருவு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15 வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் துனை தலைவர் பிரியா வடிவேல் ஒன்றிய இனை செயலாளர் பரிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பரதநாட்டியம், ஒயிலாட்டம், பத்திராகாளி, நாட்டுப்புற நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் சக்திவேல் மான்விழி ஹரிஹரன் நந்தினி லட்சுமி,ஷாலினி, ஆகியோர் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
இதில் வார்டு உறுப்பினர்கள் ஜெகநாதன், வைலட் மகேந்திரன், ராஜ்பாண்டியன், ஊஞ்சல் தேன் சிட்டு இதழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசி சத்துணவு அமைப்பாளர் லட்சுமி, சிக்கந்தர், அக்பர், மற்றும் மாணவா மாணவிகளின் பெற்றோர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

