
பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் கலைஞரின் நகர் புற மேம்பாட்டு சாலைகளின் திட்டத்தின் கீழ் 2 கோடியே 62 இலட்சம் பணிகள் முதற்கட்டமாக துவக்கம்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 21 வார்டு கொண்ட நகராட்சியாகும் இந்த நகராட்ச்சிக்குட்பட்ட வார்டுகளில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடி 62 லட்சம் மதிப்பீட்டில் 49 தார் சாலைகள் அமைக்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக எம்ஜிஆர் நகர் செல்லும் சாலையில் பணியானது நடைப்பெற்று வருவதை நேற்று பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் நகர மன்ற துணைத் தலைவரும் திமுக நகர செயலாளருமான ஆலியார் ஜுபேர் அஹ்மத் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் வேலவன் ஆகியோர் சாலைகளின் தரத்தை குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் தங்கமணி வார்டு கவுன்சிலர்கள் நாகஜோதி பாபு, ஜானகி வில்லியம் பீட்டர் ஆலியார் அர்ஷத் ஒப்பந்ததாரர் பட்டாபி

