மகாராஷ்டிராவில், பெண்களுக்கு உறுதியளித்தபடி மாதந்தோறும் 2 ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. திட்டப் பயனாளிகளை மும்பையில் தனது இல்லத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார்.
அப்போது தேர்தலில் உறுதியளித்தபடி இந்தத் தொகை 2 ஆயிரத்து நூறு ரூபாயாக உயர்த்தப்படும் என அவர் உறுதியளித்தார். பின்னர், பெண்களுடன் ஏக்நாத் ஷிண்டே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.