
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை அதன் நிறுவனர் மற்றும் தலைவர் அண்ணா அருணகிரி என்பவர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல சமூகங்கள் உள்ளன. இதில் வெள்ளாளர், முதலியார், அகமுடையார், துளுவ வேளாளர், பிள்ளைமார்கள், செட்டியார்கள், உடையார் என பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களை ஒன்றிணைத்து தமிழ்நாட்டில் இழந்த அரசியல் அதிகாரத்தையும், உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற உரிய நோக்கத்தில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பிற்படுத்தப்பட்டோர் மக்களின் குரலாக இந்த அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் களத்தில் தொடர்ந்து உரிமைக்காகவும், இட ஒதுக்கீட்டுக்காகவும் போராடும், எங்கள் இயக்கத்தில் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரும் சேரலாம் இது அரசியல் சார்பற்றது என பேசினார். இந்த நிகழ்வின் போது அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்..