
பிரெஞ்சு கலாச்சார இசை நிகழ்ச்சி . 26 பிப்ரவரி 2025 அன்று கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு காமன் வெல்த் அன்னை தெரசா உலகளாவிய மையம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் இணைந்து கல்லூரியின் பாவையர் அரங்கத்தில் பிரஞ்சு இசைக்கச்சேரி நடத்தியது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் . A . முத்து மீனலோசினி வரவேரவேற்புரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர் . சிஸ்க்ககன் பற்றியும் அவர்களது 45 வருட வெற்றியும் பற்றிய சிறப்புரையை தேர்வு கட்டுப்பட்டு அதிகாரி முனைவர்.க்ளாரா தேன்மொழி அவர்கள் வழங்கினார். மேலும் அவர்களது இசை ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மீண்டும் இணைதல் என்ற கருத்தில் பாடிய பாடல்கள் அவர்களுடைய மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி எடுத்துரைக்கும் விதமாக இருந்தது. அவர்களது பாடலும், இசையும் மலேயா மொழியில் அவர்களது வாழ்விடங்களையும் எண்ணங்களையும் பிரதிபலித்தது. நிகழ்ச்சியின் நிறைவாக இக்குழுவின் தலைவர் கில்பர்ட் , பௌனியா , சில்வி,கோலின் மற்றும் எடிசன் அவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவிகளும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

