
க.பாலகுரு,
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்.
பள்ளி மாணவர் மாணவியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒன்றியம் சார்பில் போட்டிகள் நடைபெற்றது.
திருவாரூர் மார்ச் ,10-
குடவாசல் ஒன்றியம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர் மாணவியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒன்றியம் சார்பில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் குடவாசல் ஒன்றியம் விஷ்ணுபுரம் அரசு பகுதி உதவி பெறும் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் மதியம் 2 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க குடவாசல் ஒன்றிய செயலாளர் DR.ஜே. கஞ்சமலை அனைவரையும் வரவேற்று தொடக்க உரையாற்றினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம் எஸ் ஸ்டீபன்நாதன் குடவாசல் வட்டார கல்வி அலுவலர் க. குமரேசன் கலந்து கொண்டனர். ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமையாசிரியர் குமரன் ஆடியோ வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவியருக்கான வினாடி வினா அறிவியல் கதை சொல்லும் போட்டி சுற்றுச்சூழல் ஓவியப்போட்டி முதலிய போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை தமிழாசிரியர் ரகுபதி அறிவியல் இயக்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆசிரியை தமிழ்ச்செல்வி விசாலாட்சி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தனது பாராட்டுரையில் குடவாசல் ஒன்றியத்தில் மாணவர்களின் கல்வி விழிப்புணர்வுக்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் மாணவ மாணவியருக்கான போட்டியில் கருத்தரங்குகளை தன்னார்வதுடன் செய்து வரும் ஒன்றிய செயலாளர் கஞ்சமலை அவர்களையும் ஒன்றிய குழு உறுப்பினர்களையும் வெகுவாக பாராட்டினார். போட்டிகள் எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதனை மாநிலச் செயலாளர் எம் எஸ் ஸ்டீபன் நாதன் விளக்கி கூறினார். 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிம்மேலி மாணவர்கள் முதலிடத்தையும் முதல் பரிசையும் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி ஆங்கில வழி மாணவர்கள் இரண்டாம் பரிசையும் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி தமிழ் வழி மாணவர்கள் மூன்றாம் பரிசையும் பெற்றனர். 4 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அறிவியல் கதை சொல்லும் போட்டியில் வடுகக்குடி தி ப்ளூம் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி மாணவன் அஸ்வின் முதல் பரிசையும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் கட்டளை மாணவி மதுஸ்ரீ இரண்டாம் பரிசையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடுகக்குடி மாணவி வன ஸ்ரீ மூன்றாம் பரிசையும், 1 முதல் 3 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஓவியப் போட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நாலாங்கட்டளை மாணவி கவிஸ்ரீ முதலிடத்தையும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பரவாக்கரை மாணவி தேசிகா இரண்டாம் இடத்தையும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் கட்டளை மாணவன் ஞானதர்ஷன் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விஷ்ணுபுரம் மாணவி வினோதினி மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர் மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் வட்டார கல்வி அலுவலர் குமரேசன் மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன் தாளாளர் கார்த்திகேயன் தலைமையாசிரியர் குமரன் தமிழாசிரியர் ரகுபதி கேடயம் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். நிகழ்வின் இறுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க குடவாசல் ஒன்றிய பொருளாளர் ஆர். பிரபாகரன் நன்றி கூறினார்.

