
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்து
தென்காசி: புளியங்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து
விபத்தில் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி; ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இறந்த செல்வகுமார் பரமானந்தா பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சம்பவ இடத்தில் தெற்கிலிருந்து வடக்காக நோக்கி வரும்போது எதிரில் எதிரி ஒட்டி வந்த அரசு பேருந்து மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர் புளியங்குடி அரசு மருத்துவமனை ஆக்சிடென்ட் கொண்டு செல்லும் வழியில் இறந்தார், காயம் பட்ட குழந்தைகள் ரோகன் மற்றும் ரோஹித் சிந்தாமணி செயின் மேரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், காயம் பட்ட சிறுமி ராகிஷா செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர், இறந்த செல்வகுமாரின் உடல் புளியங்குடி அரசு மருத்துவமனையில் உள்ளது

