
நாகர்கோவிலில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கழிவு நீர் செல்ல தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கி புதைந்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் முன்பு கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.

