கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2001 நவம்பர் 29ல் விஷ சாராயம் குடித்து 53 பேர் பலியான வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 22 பேருக்கு எதிரான வழக்கில் தலைமறைவாக இருந்த தென்காசியை சேர்ந்த மாடசாமி (72) என்பவரை தனிப்படை போலீசார் தஞ்சாவூரில் கைது செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 7 பேர் இறந்துவிட்டனர். இது 23 ஆண்டுகளுக்குப் பின்பு நடந்த முக்கிய நடவடிக்கையாகும்.
\