
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் நடத்துனராக பணி புரிந்து பணியின் போது மரணமடைந்த சுந்தரம் குடும்பத்தினருக்கு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் அறிவுறுத்தலின்படி ரூ 5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன், துணை மேலாளர் கூட்டாண்மை சுடலைமணி மற்றும் உதவி மேலாளர் இயக்கம் வெங்கடேஷ் பிரபு கலந்து கொண்டு ரூ5 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.
அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

