நெருங்கும் புயல் சின்னம்: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

நெருங்கும் புயல் சின்னம்: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 30ஆம் தேதி வடதமிழகக் கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடதமிழக மற்றும் புதுவை கடலோர பகுதிகளில், காரைக்கால் – மாமல்லபுரத்துக்கு இடையில் 30ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வரை, இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் நாளை வெள்ளிக்கிழமை (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

தமிழக கரையோரம் நோக்கி மெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.28) காலை 8.30 மணியளவில் இலங்கை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த பகுதிகளில் 310 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.

இது அடுத்த 12 மணி நேரத்தில், வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, 30-ஆம் தேதி காலை, சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

தமிழக கரையோரம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *