நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை திருமங்கலம் சார் பதிவாளர் பாண்டியராஜனுடன்.. பத்திர எழுத்தர் பாலமணிகண்டனும் கைது!

நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை திருமங்கலம் சார் பதிவாளர் பாண்டியராஜனுடன்.. பத்திர எழுத்தர் பாலமணிகண்டனும் கைது!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சாப்ட்வேர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கிழவநேரியில் 3.18 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். நிலத்தை பதிவு செய்ய திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் ( பொறுப்பிலிருந்த பாண்டியராஜனை(வயது 47), அணுகியுள்ளார்.

நிலத்திற்கான மூலப்பத்திரம் காணாமல் போனதாக தேனி தென்கரை ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதன் உண்மை தன்மை குறித்து விசாரிக்காமல் இருக்க ரூ.1 லட்சத்தை லஞ்சமாக அவர் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் கேட்ட லஞ்ச பணத்தை செந்தில்குமார் தர மறுத்துள்ளார். காணாமல் போனது உண்மைதான் என போலீசார் உறுதி சான்றிதழ் அளித்த போதிலும் ரூ.1 லட்சம் தந்தால்தான் பத்திரப்பதிவு செய்து தருவேன் என்று கரராக கூறியுள்ளார் பதிவாளர் பாண்டியராஜன்.

பிறகு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சார்பதிவாளர் பாண்டியராஜன், செந்தில்குமாரிடம் கடைசியாக ரூ.70 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். அந்த தொகையை பத்திர எழுத்தர் பாலமணிகண்டனின்(வயது 40), வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினார். அவருக்குரியது போலவே செந்தில்குமார் பணத்தை செலுத்துவதாக கூறிவிட்டு லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத செந்தில்குமார் இது குறித்து மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பவுடர் தடவியே ரூபாய் நோட்டுக்களை புகார்தாரரான செந்தில்குமாரிடம் கொடுத்து லஞ்சம் கேட்டு சார் பதிவாளரிடம் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர் பின்னர். திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியிலிருந்து பாண்டியராஜனிடம் சென்ற அவர் கூறியது போலவே அலுவலக வெளிப்புறத்திலிருந்த பத்திர எழுத்தாளர் பாலமணிகண்டன் லஞ்சப் பணத்தை கொடுக்க அதை அவர் பெற்றுக் கொண்ட போது கையும் களவுமாக பிடித்ததுடன், பின்னர். சார் பதிவாளர் (பொறுப்பு) பாண்டியராஜனையும் கைது செய்துள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்னர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கூப்பிட்டு சென்று மருத்துவப் பரிசோதனை முடிந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுரை திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் (பொறுப்பு) சார் பதிவாளர் பாண்டியராஜனுடன், பத்திர எழுத்தாளர் பாலமணிகண்டன் ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *