நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

சேலம் காக்காபாளையத்தில் அமைந்துள்ள நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நாலெட்ஜ் குழுமத்தின் அறக்கட்டளைத் செயலாளர் முனைவர் குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர் ராஜராஜன் மற்றும் மிஸ்டர் கூப்பர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மோகன்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

இவ்விழாவில் சுமார் 750 பொறியியல் மற்றும் மேலாண்மைத்துறை மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் வழங்கப்பட்டது.
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனரும் மற்றும் கல்லூரியின் செயல் தலைவருமான முனைவர் பிஎஸ்எஸ் சீனிவாசன் பேசுகையில், பொறியாளர்கள் தங்களது பணியில் சமூக பொறுப்புடனும், நெறிமுறைகளுடனும் செயல்பட வேண்டும் என்றார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் விசாகவேல் 2024&-2025 ஆண்டறிக்கையை வாசித்தார். அறக்கட்டளையின் பொருளாளர் சுரேஷ்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குனர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *