
பேர்ணாம்பட்டில் த.மு.மு.க சார்பில்
இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம் பேரணாம்பட்டு நகர தலைவர் அப்துல் சமத் தலைமை தாங்கினார்.
தமுமுக ஒன்றிய செயலாளர் முஜம்மில்அஹ்மத் வரவேற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பி. எஸ். நிஜாமுதீன், மாநிலத் துணைச் செயலாளர் மற்றும் மருத்துவ சேவை அணி பதேகான் தாஹா முஹம்மத்,
மருத்துவ சேவை அணி தமுமுக மாவட்ட செயலாளர் இக்பால் அஹ்மத்
மாவட்ட பொருளாளர் ரமீஸ் அஹ்மத் தொடங்கி வைத்தனர்.
இதில் பேரணாம்பட்டு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவரிடம் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் பேரணாம்பட்டு நகர செயலாளர் சகீர் அஹ்மத் நன்றி உரையாற்றினார்.