
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காட்பாடி சாலையிலிருந்து பேர்ணாம்பட்டு சாலை வரை புறவழிச் சாலை சுமார் 7 கிலோமீட்டர் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது
இதனிடையே புறவழிச் சாலையில் வரும் வாகனங்களும் குடியாத்தம் முதல் பலமநேரி செல்லும் வாகனங்களும் அடிக்கடி தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது.
இதனிடையே தொடர் விபத்துகளை தடுக்க குடியாத்தம்- பலமநேரி சாலையில் புறவழிச் சாலை செல்லும் லட்சுமுனாபுரம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடியாத்தம்- பலமனேரி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.