தேனியில் சட்ட விரோத கல்குவாரி….!!!!!! நில உரிமையாளர் உட்பட ஏழு பேர் கைது……!!!

தேனியில் சட்ட விரோத கல்குவாரி….!!!!!! நில உரிமையாளர் உட்பட ஏழு பேர் கைது……!!!

தேனியில் சட்ட விரோத கல்குவாரி....!!!!!! நில உரிமையாளர் உட்பட ஏழு பேர் கைது......!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டி பகுதியில் லதா என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வருவதாக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லுவிற்கு வந்த தகவலின் அடிப்படையில், பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும்  ஜெயமங்கலம் காவல் சார்பு ஆய்வாளர் உட்பட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது கனிமவளத்துறையின் எந்தவித அனுமதியும் இல்லாமல் கல்குவாரி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கல்குவாரியில் வேலை பார்த்த நான்கு நபர்கள் மற்றும் நில உரிமையாளர் லதா உட்பட 7 நபர்களை ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் கைது செய்தார் .அங்கு பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்கு உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட செல்லட்டின் குச்சி 20, களி 60 மற்றும் வெடி மருந்து15 கிலோ உள்ளிட்ட வெடிபொருட்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் விசாரணையில் நில உரிமையாளர் லதாவிடம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்ற நபர் தான் சிலை செய்யும் சிற்பி என்றும், நிலத்தில் உள்ள பாறாங்கற்களை சிலை செய்வதற்காக எடுத்துக்கொண்டு  நிலத்தை சீர்படுத்தி தருவதாக கூறி கடந்த ஒரு மாத காலமாக நிலத்தில் உள்ள கற்களை வெடிவைத்து  தகர்த்து குவாரி நடத்தி வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் குவாரி  நடத்தி வந்த பாலச்சந்திரன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் பெரியகுளம் வட்டாட்சியர் மருது பாண்டியன் உள்ளிட்ட வருவாய் துறையினர் அனுமதி இன்றி முறைகேடாக செயல்பட்ட குவாரியை ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதுபோன்ற வேறு எங்கும் சட்டோரவிரோதமாக கல்குவாரிகள் நடத்தி தவறுகள் ஏதேனும் செய்து உள்ளார்களா? என்ற கோணத்தில் ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *