தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்இளம் வயது மாணவர்கள் அறிவியல் சோதனை செய்து காண்பித்து அசத்தல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

அ.மு.மு.அறக்கட்டளை அறிவியல் பயிற்சியாளர்கள் தனசேகர் முன்னனிலை வகித்தார், பறக்கும் யானை, தராசு, காற்றின் அழுத்தம், மடிக்கணினி, நீரின் அடர்த்தி, வெப்ப சலனம், ஊசி துளை கேமிரா, ஒளியின் பாதை, நீர் பாயும் தன்மை போன்ற அறிவியல் சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.

மாணவர்கள் பிரஜித்,கனிஷ்கா, சரண் ஆகியோர் முறையே முதல்,இரண்டு, மூன்றாம் பரிசுகளை பெற்றனர். முதல் வகுப்பு மாணவி மழலை மொழியில் அறிவியல் சோதனை செய்ததுடன் அருமையாக விளக்கியதை பாராட்டி சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள் செய்து இருந்தார்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *