
கொசவபட்டி அருகில் வேலாம்பட்டியில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை தமிழர் மாமன்றம் இணைந்து தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள், உலகத் தாய்மொழி தினம், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
இவ்விழாவிற்கு அப்துல் கலாம் அறக்கட்டளை செயலாளர் முனைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார், தமிழர் மாமன்றம் தலைவர் தமிழ்திரு.ராமசாமி முன்னிலை வகித்தார்,
சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவில் கல்லூரி நிர்வாக அலுவலர், சேவா ரத்னா கல்வியாளர் பிரஸ் இரா.கணேசன், விஞ்ஞானி டாக்டர் கிரி பிரசாத், தமிழ்நாடு காந்தி மன்ற தலைவர் திரு.ஜெயசீலன், பேராசிரியை ராம திலகம் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பாக அறிவியல் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்கள்.
நிறைவாக நிர்வாகி விவசாயம் காப்போம் பசுமை புரட்சி இயக்க தலைவர் திரு.முருகேசன் நன்றி கூறினார்.
இதில் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.