
துாத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை |பதிவாளரிடம் சிக்கியது 3.63 லட்சம் ரூபாய்!
தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.3,63,000 கைப்பற்றப்பட்டது. மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், புதுக்கோட்டை சார் பதிவாளர் செல்வகுமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

