திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா.

திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா.

திருவாரூர் ஆகஸ்ட்,06-இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை பாரத இருவார விழா மற்றும் திறன் இந்தியா திட்ட பத்தாம் ஆண்டு நிறைவு விழா ஜூலை 16 முதல் 31 வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வின் மூலம் பொதுமக்களிடையே தூய்மை உறுதிமொழி ஏற்றல், திடக்கழிவு மேலாண்மை, இயற்கை முறையில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், நீர் மேலாண்மை,மரம் வளர்ப்பின் முக்கியத்துவம்,பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்தல், நாப்கின்கள் பயன்படுத்துதல், கழிப்பறைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, திருத்துறைப்பூண்டி வித்வான் மானைக்கால் உதவி தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா, தலைவர் கௌசல்யா அவர்கள் தலைமையில், இயக்குனர் பாலகணேஷ், ஸ்கார்டு செயலாளர் பாபு ராஜன்,தலைமையாசிரியர் சித்ரா முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவில், இயற்கை விவசாய ஆர்வலர் பாலம் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து பேசினார், மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது,
இந்நிகழ்ச்சியில், மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் அமுதா, மெர்சி ஜாய் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *