க.பாலகுரு,
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்.

திருவாரூர் அருகே 34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சட்டமன்ற நிதியில் அரசு பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் பிப்,28-திருவாரூர் அருகே திருவாதிரைமங்கலம் ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து சுமார் 34, இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் நலன் கருதி நிழல் பந்தல் அமைத்துத் தர கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர் உடனடியாக நிழல் பந்தல் அமைக்கும் வகையில் ரூபாய் 25,000 ரொக்கப் பணத்தை பள்ளி முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் தேவா வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.