
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட மெய்யூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொறுப்புச் செயலாளராக உள்ள ஏழுமலை பல்வேறு ஊழல்களில் ஈடுபடுவதாகவும்- அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.,
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிக பொறுப்புச் செயலாளராக உள்ள ஏழுமலை என்பவர் மீது ,
திருவள்ளூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது அதில்,
தற்காலிக பொறுப்பு செயலாளராக உள்ள ஏழுமலை என்பவர் அலுவலகத்தை சரியான நேரங்களில் திறப்பது இல்லை என்றும்,
சரிவர அலுவலகத்திற்கு வராமல் அலுவலகம் மூடியே இருப்பதாகவும் ,
அந்த கட்டிடத்திலேயே இ சேவை மையம் செயல்பட்டு வருவதால்
இ சேவை பெற முடியாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னாலுக்கு ஆளாவதாகவும்,
மேலும் சங்க அலுவலகத்தில் ஏழுமலை அவர்களது மகன்கள் மற்றும் தம்பி மகன்கள் சங்கத்தின் பணிகளை சட்டவிரோதமாக செய்து வருவதாகவும்,
சொந்தப் பயன்பாட்டிற்காக அலுவலகத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவது சங்கத்தின் இன்டர்நெட் கனெக்சன் அவருடைய செல்போனுக்கு வைபை மூலம் உபயோகித்து வருவது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது,
அதேபோன்று பல்வேறு முறை கேடுகள் அவர் மீது இருந்து இரண்டு முறை அவரை பணியிட மாற்றம் அதிகாரிகள் செய்தும் அவர் மாற்றிய இடத்திற்கு செல்லாமல் இதே இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்,
இது குறித்து கேட்டால் எங்கு வேணாலும் பொய் சொல்லிக் கொள் என்று கூறுவதாக விவசாய சங்கங்களில் திருவள்ளூர் மாவட்ட கவுரவத் தலைவர் மதன்குமார் தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஏழுமலையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
இது அரசியல் கால் புணர்ச்சியால் என் மீது கொடுக்கப்படும் புகாராகவும்,
நான் திமுகவில் இருக்கிறேன், என் மனைவி தி மு க கவுன்சிலர் ஆக இருந்தர் வரும் தேர்தலுக்கு தலைவராக நிற்க விடாமல் தடுப்பதற்காக இது போன்று புகார் அளிப்பதாக சாக்கு சொல்லிவிட்டு தொலைபேசி துண்டித்தார்.,

