
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா பூங்குளம் கிராமத்தில் 373 சதுர மீட்டர் காலி வீட்டு மனை சம்பந்தமாக கடந்த 31.08.2025 அன்று திருமலைவாசன் குடும்பத்தினருக்கும் சந்திரசேகரன் ஞானசேகரன் பொன்னுசாமி தேன்மொழி பிரபாகரன் ஆகியோர் இரும்பு ராடு மற்றும் கட்டையால் திருமலை குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருமலைவாசன் மற்றும் அவரது தாய் தந்தையை விட்டு அருகில் இருந்த பொதுமக்கள் 108 அவசர வாகனத்தில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 7 நாட்கள் மருத்துவமனை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். வரும் வழியில் பின் தொடர்ந்து சந்திரசேகரன் ஞானசேகரன் வருவதை கண்ட திருமலைவாசன் குடும்பத்தினர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என கருதி பாதுகாப்பு கேட்டு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.
இம் மனுவில் பூங்குளம் கிராம சர்வே எண் 62/3A, 62/2A8 மன்னுக்கான், மற்றும் திம்மராயன் ஆகிய இருவரும் பாகப்பிரிவினை செய்யாமல் கூட்டாக அனுபவித்து வந்த நிலையில் மன்னுக்கான் வாசுதாரர் சக்கரவர்த்தி மற்றும் திம்மராயன் வாரிசு பொன்னுசாமி வருவாய்த் துறை மூலம் சக்கரவர்த்தியும் பொன்னுசாமியும் இருவரும் ஒருவரே என்று போலிச் சான்று பெற்று 373 சதுர மீட்டர் இடத்தை அபகரித்துள்ளார். இது சம்பந்தமாக சக்கரவர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பொன்னுசாமி ஞானசேகரன் சந்திரசேகர் தேன்மொழி பிரபாகரன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சக்கரவர்த்தி குடும்பத்தினரை தீர்த்து கட்ட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த 9-9-25 அன்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது சம்பந்தமாக பலமுறை ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி நேரில் சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்.

