
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சிவசெளந்திரவள்ளி IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு சியாமளா தேவி, IPS அவர்கள் ஆகியோரிடமிருந்து சிறு அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி! எதிர்பாராத அங்கீகாரம் கொஞ்சம் எப்போதும் கூடுதல் உற்சாகத்தைப் பரிசளிக்கும்! அதுவும் நாம் நேசித்துச் செய்யும் ஒரு செயல்பாடுக்காகச் சிறு மதிப்பு வழங்கப்படும் போது உத்வேகம் பிறக்கும்!
பறவைகள் மற்றும் காட்டுயிர் சார்ந்த இயக்கத்துக்காக இந்த நன்மதிப்பு கிடைத்திருப்பதில் உற்சாகம் தான்! கேமிராவின் வழியே காட்சிக்கொடுத்த பறவைகளுக்கும், வழிகாட்டி புது உலகத்தைக் காட்டிக்கொடுத்த காடுகளுக்கும் நன்றி! பயணங்கள் அமைத்துக்கொடுத்த பாதையில் திருப்பத்தூர் வனத்துறையோடு இணைந்து தொடர்ந்து செயல்படுவோம்!
நன்றி மாவட்ட வன அலுவலர் திரு.மகேந்திரன் அவர்கள் மற்றும் திரு.சோலைராஜன் அவர்கள், திருப்பத்தூர் வனத்துறை!
- மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

